கொரோனாவால் இளைஞர்-யுவதிகள் மத்தியில் பாலியல் செயலிழப்பு?

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்-யுவதிகள்; பாலியல் செயலிழப்பு மற்றும் கருவுறாமைக்கு ஆளாகிறார்கள்...

கொரோனாவால் இளைஞர்-யுவதிகள் மத்தியில் பாலியல் செயலிழப்பு?

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்-யுவதிகள்; பாலியல் செயலிழப்பு மற்றும் கருவுறாமைக்கு ஆளாகிறார்கள் என்று கூறும் பல செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

இலங்கையின் கொரோனா ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தானி, இன்னும் அறிவியல் பூர்வமாக இவ்வாறான பின்விளைவுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், எனவே மக்கள் அதைப் பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் கோரியுள்ளார்.

மேலும், பூஸ்டர் அளவு காரணமாக மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்று கூறும் எந்த அறிக்கையிலும் உண்மை இல்லை என்று ஹம்தானி மீண்டும் வலியுறுத்தினார்.

எனவே, இதுபோன்ற பொய்யான செய்திகளுக்கு மக்கள் ஏமாறாமல், பூஸ்டர் அளவை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.