கோவேக்சின் 2021ம் ஆண்டு 2ம் காலாண்டில் வெளிவரும்

உலக நாடுகளுக்கு சவாலாக உள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனமும் ஈடுபட்டு உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கோவேக்சின் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பு மருந்துக்கான 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் கடந்த திங்கட்கிழமையில் இருந்து தொடங்கப்பட்டு விட்டன.

இதனை தொடர்ந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் தரத்திற்கான செயல் தலைவர் சாய் பிரசாத் இன்று கருத்து வெளியிட்டார்.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் இந்தியாவின் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை தடுப்பு மருந்துகள் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் 50 சதவீதம் பூர்த்தி செய்து விட்டாலே அவற்றுக்கு ஒப்புதல் வழங்குகின்றன.

கோவேக்சின் தடுப்பு மருந்து குறைந்தது 60 சதவீதம் வெற்றிகரமானதாக இருக்கும். அதற்கு கூடுதலாகவும் சிறப்புடன் செயல்பட முடியும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கோவேக்சின் தடுப்பு மருந்து வருகிற 2021ம் ஆண்டின் 2ம் காலாண்டில் வெளியிட இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

பலத்த காற்றால் தரை தட்டி நின்ற கப்பல்; 400 பேர் சிக்கி தவிப்பு

Next Article

2,000 வருடங்களுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற இருவரது சடலங்கள் கண்டுபிடிப்பு

Related Posts
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Read More

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
Total
0
Share