Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள் நேற்று பதிவாகியதுடன், நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுடன், தீவிர நீரிழிவு மற்றும் தீவிர சிறுநீரக நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொவிட் நியூமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 12 ஐ சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 20 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்தார்.

கொவிட் தொற்றுடன், குருதி நஞ்சானமை, சிறுநீர் வழியில் ஏற்பட்ட தீவிர தொற்று நிலையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் தீவிரமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை அவரின் மரணத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x