புகைப்பட தொகுப்பு

 • Photo of நுவரெலியாவில்..

  நுவரெலியாவில்..

  நுவரெலியா – கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்படும் கற்பக விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் அண்மையில் நடைபெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Read More »
 • Photo of 800,000 மின் இணைப்புகள் சீராக்கம்

  800,000 மின் இணைப்புகள் சீராக்கம்

  கடந்த 48 மணித்தியாலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை சீராக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை, இராணுவத்தின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, இதுவரை சுமார் 800,000 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Read More »
 • Photo of மாத்தளைக்கு புதிய தலைவர்

  மாத்தளைக்கு புதிய தலைவர்

  பிரதியமைச்சரை் லக்ஷ்மன் வசந்த பொரேரா, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தளை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

  Read More »
 • Photo of தேர்த்திருவிழா…

  தேர்த்திருவிழா…

  மத்திய கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு (பாய் தோட்டம்) அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்பாள் ஆலய 15ஆவது வருட தேர்த்திருவிழா, அண்மையில் நடைபெற்றது. இத்திருவிழாவில், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராஜா லுஷாந்தன் உட்பட அடியார்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

  Read More »
 • Photo of தென் கொரியாவில் மைத்திரி…

  தென் கொரியாவில் மைத்திரி…

  தென் கொரியாவுக்கு, 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அங்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. வரவேற்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயின் மேற்கொண்டிருந்தார். சியோல் நகரில் அமைந்துள்ள ஜொக்யேசா புராதன பௌத்த விகாரையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளை மேற்கொண்டார்.

  Read More »
 • Photo of பயிற்சிநெறி…

  பயிற்சிநெறி…

  தெற்காசியப் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் பெண்களின் மாதாந்த உடற்சுகாதார முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிநெறியில் வளவாளர்களாகப் பங்கு பற்றும் வெளிநாட்டவர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். வளவாளர்களுடன் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிரி விதானவும், அமைச்சின் உயர் அதிகாரிகளும் இணைந்துகொண்டனர். துல்ஹிரிய மாஸ் அத்தீனா நிலையத்தில் பயிற்சிநெறி நடைபெற்று வருகின்றது. இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 70 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது.

  Read More »
 • Photo of மஸ்கெலியாவில் சடலங்கள்…

  மஸ்கெலியாவில் சடலங்கள்…

  மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த அண்ணன் – தங்கை ஆகிய இருவரின் சடலங்கள், கடற்படை சுழியோடிகளின் உதவியால் இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

  Read More »
 • Photo of ஈகைச் சுடரேந்தி…

  ஈகைச் சுடரேந்தி…

  உயிர் நீத்த மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்வு, ஈழத் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. (படங்கள்: தொகுப்பு)

  Read More »
 • Photo of ஸ்ரீ சம்புத்த ஜயந்தி நிலையத்தில்..

  ஸ்ரீ சம்புத்த ஜயந்தி நிலையத்தில்..

  ஸ்ரீ சம்புத்த ஜயந்தி நிலையத்தில் இடம்பெற்ற சித்திரக் கண்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று கலந்துகொண்டார்.

  Read More »
 • Photo of மத்திய பன்னசேக வித்தியாலயத்தில் புதிய நுாலகம் திறப்பு

  மத்திய பன்னசேக வித்தியாலயத்தில் புதிய நுாலகம் திறப்பு

  யாழ்ப்பாண புத்துாரில் அமைந்துள்ள மத்திய பன்னசேக வித்தியாலயத்தில் 50 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு புதிய நுாலகம் ஒன்று (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

  Read More »
Back to top button
x
Close
Close