புகைப்பட தொகுப்பு

 • Photo of இராஜகிரிய மேம்பாலம்…

  இராஜகிரிய மேம்பாலம்…

  இராஜகிரிய பகுதியில் நெடுங்காலமாக நிலவிய வாகன நெரிசலுக்குத் தீர்வாக இராஜகிரிய சந்தியில், 471 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தைப் படங்களில் காணலாம். (படங்கள் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு)

  Read More »
 • Photo of களனி ரஜமகா விகாரையில்…

  களனி ரஜமகா விகாரையில்…

  களனி ரஜமகா விகாரைக்கு சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆசிபெற்றுள்ளார்.

  Read More »
 • Photo of கேப்பாபுலவில் 133 ஏக்கர் காணி கையளிப்பு

  கேப்பாபுலவில் 133 ஏக்கர் காணி கையளிப்பு

  கேப்பாபுலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 133 ஏக்கர் காணி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த காணிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 85 குடும்பங்களுக்கு சொந்தமான இந்த காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Read More »
 • Photo of தாமரை மொட்டில் மேலும் இருவர் இணைவு

  தாமரை மொட்டில் மேலும் இருவர் இணைவு

  கடுவலை நகர சபையின் முன்னாள் தலைவர் ஜீ.எச்.புத்ததாசவுக்கு நெருக்கமான முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் இருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டனர். சுனேத் அத்திட்டிய மற்றும் நில்சாந்த ஆகிய முன்னாள் நகரசபை உறுப்பினர்களே இவ்வாறு இணைந்துகொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இவர்கள் இருவரும் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டனர்.

  Read More »
 • Photo of மலேசியா பிரதமர் – கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

  மலேசியா பிரதமர் – கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

  இலங்கை வந்துள்ள மலேசியா நாட்டின் பிரதமர் நஜீப் அப்துல் ரஸாக், மலேசியா நாட்டின் சுகாதார அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம், மலேசியா நாட்டின் வர்த்தக அமைச்சர் முஸ்தப்பா முஹமட் ஆகியோரை, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், கொழும்பில் இன்று (19) சந்தித்தார். இச்சந்திப்பில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ஏ.ஜே.எம் முஸம்மில் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

  Read More »
 • Photo of 200 வருடங்கள் பழமையான நாகலிங்கம் சிலை பிரதிஷ்டை

  200 வருடங்கள் பழமையான நாகலிங்கம் சிலை பிரதிஷ்டை

  புசல்லாவ, டெல்டா தோட்டம், கிழக்கு பிரிவில் கண்டுபிடிப்பட்ட 200 வருடங்களுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் நாகலிங்கம் சிலை, அங்குள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாகலிங்கம் காணப்பட்ட இடத்தில் 02 நாட்கள் பூஜைகள் நடைபெற்றதுடன், தோட்டத்தில் தற்போது புதிதாக கட்டபட்டு வரும் முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு ஊர்வலமாக சப்பரத்தில் கொண்டு செல்லபட்டது. அதனையடுத்து, பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சிலை வைக்கப்படடிருந்த இடத்தில் பாரிய பாலம் ஒன்று ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அக்காலத்தில் வாழ்ந்த மக்களால், இந்தச் சிலையை வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

  Read More »
 • Photo of 200 வருடங்கள் பழமையான நாகலிங்கம் கண்டெடுப்பு

  200 வருடங்கள் பழமையான நாகலிங்கம் கண்டெடுப்பு

  சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் சிவலிங்கம் சிலையொன்று (நாகலிங்கம்), புஸ்ஸலாவ – டெல்டா தோட்டம் கிழக்குப் பிரிவில், கடந்த வௌ்ளிக்கிழமை (15) இரவு 8 மணிக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், ஆற்றங்கரையில் காணப்படும் இராமர் ஆலயத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்டு, வழிபாடு செல்வதற்காக நாளாந்தம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மார்கழி மாதம் திருவெம்பாவையொட்டி, மார்கழி ஒன்று முதல் தை ஒன்று வரை இராமர் பஜனை பாடுவது பெருந்தோட்ட மக்களிடத்தில் வழக்கமாக உள்ளது. மார்கழி முதலாம் நாள் கம்பம் பாலித்தல் நடைபெறும்.…

  Read More »
 • Photo of 50 சீன ஜோடிகளுக்கு திருமணம் (படங்கள்)

  50 சீன ஜோடிகளுக்கு திருமணம் (படங்கள்)

  50 சீன ஜோடிகளுக்கு கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா நேற்று இடம்பெற்றது. அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  Read More »
 • Photo of “சுரக்ஷா”

  “சுரக்ஷா”

  “சுரக்ஷா” மாணவர் காப்பீட்டு தேசிய வேலைத் திட்டத்தின் அறிமுக நிகழ்வு, பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.08 மணிக்கு நடைபெற்றது. “நிதமும் காப்போம் நாட்டின் பிள்ளைகளை” எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் காப்பீட்டுத் திட்டத்திலே, இலங்கை மாணவச் செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு, கல்வியமைச்சால் இலவசமாக வழங்கப்படும் வைத்திய மற்றும் தனியாள் காப்புறுதித் திட்டமாகும். இந்நிகழ்வு, பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.நவரட்ணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது…

  Read More »
 • Photo of மின்னொளியில் பரீட்சை…

  மின்னொளியில் பரீட்சை…

  நிலவுகின்ற அதிகரித்த பனிமூட்டம் சூழ்ந்த வானிலை காரணமாக, அனேகமான பரீட்சை நிலையங்களில் பகல் பொழுதிலும், மின்னொளியில், மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுகின்றனர். அனுப்பியவர் – ந.மலர்வேந்தன்

  Read More »
 • Photo of கடும் மழைக்கு மத்தியில்…

  கடும் மழைக்கு மத்தியில்…

  நுவரெலிய மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருகின்ற நிலையிலுல் ஹட்டன், கொட்டகலை தலவாக்கலை, மஸ்கெலியா பகுதிகளில், கல்வி பொது தராதர சாதாரண பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் சமூகமளித்ததுடன் 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியது.

  Read More »
 • Photo of இலங்கை – இந்திய தளபதிகள் சந்திப்பு

  இலங்கை – இந்திய தளபதிகள் சந்திப்பு

  இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படையின் பிரதானி எயார் சீப் மார்ஷல் பிரெண்டர் சிங் தனோ மற்றும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடற்படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராம் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். Website – www.gossip.colombotamil.lk Website – www.videos.colombotamil.lk…

  Read More »
 • Photo of முதற்கனவே…

  முதற்கனவே…

  இலங்கையின் முதற்றர தொலைத்தொடர்புச் சேவை வழங்குநரான டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம் முதன் முறையாகத் தயாரித்து வழங்கியுள்ள தமிழ் மொபைல் தொலைக்காட்சித் தொடரான “முதற்கனவே” தொடரின் முதன்மைத் திரையிடல், டயலொக் தலைமைக் காரியாலயத்தில், நேற்றிரவு (06) இடம்பெற்றது. முற்றுமுழுதாக இலங்கைப் படைப்பாளிகளின் உழைப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான “முதற்கனவே” தொடர், Open Theater தயாரிப்பில் நடராஜா மணிவாணன் இயக்கத்தில், மொபைல் நாடகத்தின் ஓர் அத்திபாரமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறைக்கு ஏற்ற வகையில், புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நாடகத்தில், இலங்கையின் புகழ்பெற்ற ஜெராட் நோயல், ஸ்ரீதேவி,…

  Read More »
Back to top button
x
Close
Close