வெளிநாடு

 • Photo of பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல்; இருவர் பலி

  பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல்; இருவர் பலி

  பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் வழக்கம்போல் இன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு பயங்கரவாதிகள், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே நுழைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில், பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.…

  Read More »
 • Photo of அதிகாரியுடன் ஓடும் காரில் பெண் உல்லாசம்… அதிர்ச்சி வீடியோ

  அதிகாரியுடன் ஓடும் காரில் பெண் உல்லாசம்… அதிர்ச்சி வீடியோ

  ஐ.நா சபை அலுவலக பணிக்காகக் கொடுத்த காரில், பெண்ணுடன் அதிகாரி ஒருவர் உல்லாசத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில், ஐக்கிய நாடுகளின் சபைக்கு பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு அலுவலக அலுவலக பணிகளுக்காக அரசு சார்பில் வாகனம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வாகனம், அந்நாட்டின் முக்கிய சாலையில் மாலை நேரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் பின் இருக்கையில் ஒரு அதிகாரி அமர்ந்திருந்தார். அவரது மடியில் இளம் பெண் ஒருவர், சிகப்பு நிற ஆடை அணிந்தபடி, அந்த அதிகாரியின் மடியில்…

  Read More »
 • Photo of கொரோனாவின் பிறப்பிடம் சீனா இல்லையாம்? வெளியானது புதிய தடயங்கள்!

  கொரோனாவின் பிறப்பிடம் சீனா இல்லையாம்? வெளியானது புதிய தடயங்கள்!

  மார்ச் 2019 முதல் பார்சிலோனா கழிவு நீரில் கொரோனா நோயை உருவாக்கும் வைரஸைக் கண்டறிந்ததாக ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சீனாவில் கொரோனா நோய் அடையாளம் காணப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், மார்ச் 2019 இல் சேகரிக்கப்பட்ட பார்சிலோனா கழிவு நீரின் மாதிரியில் கொரோனா வைரஸ் நாவலின் தடயங்களை ஸ்பானிஷ் வைராலஜிஸ்டுகள் கண்டறிந்துள்ளனர் என்று பார்சிலோனா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் கொரோனா வைரஸ் தடயங்கள் முதன் முதலில் கண்டறியப்பட்டது என இது நாள் வரை கூறப்பட்டு வரும்…

  Read More »
 • Photo of ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்த ஃபேஸ்புக் நிறுவனர்

  ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்த ஃபேஸ்புக் நிறுவனர்

  ”அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட பெரிய அரசியல் தலைவர்களும் ஃபேஸ்புக் வரம்புக்கு உட்பட்டுதான் பதிவுகளை இடவேண்டும். அப்படிப்பட்ட வன்முறையைத் தூண்டும் பதிவுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இனவெறி, வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கும் செய்திகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இதை சுட்டிக்காட்டி கோககோலா நிறுவனம் ஃபேஸ்புக் விளம்பரங்களை வரும் 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஃபேஸ்புக்கில் விளம்பரம் தருவதை…

  Read More »
 • Photo of ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா; அதிர்ச்சியில் மருத்துவர்கள்

  ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா; அதிர்ச்சியில் மருத்துவர்கள்

  ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை உலகில் எங்கும் இப்படி நடந்ததாக தகவல் இல்லை என்று மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மெக்சிகோ நாட்டில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. ‘ட்ரிபுள் டமாக்கா’ என்று அந்தக் குழந்தைகளின் தாயும், தந்தையும் உற்சாகத்தில் மிதக்க, அந்த உற்சாகம் சில மணித்துளிகளில் பறிபோய் விட்டது. அந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை உலகில் எங்கும்…

  Read More »
 • Photo of தென் கொரிய மக்கள் மீது உளவியல் தாக்குதல் – வடகொரியா திட்டம்

  தென் கொரிய மக்கள் மீது உளவியல் தாக்குதல் – வடகொரியா திட்டம்

  கடந்த 1950 முதல் 1953ஆம் ஆண்டு வரை கொரிய தீபகற்பத்தில் போர் நடந்தபோது, தென் கொரியா, வட கொரியா நாட்டினர் எல்லையில் பலூன்களில் துண்டு பிரசுரங்களை அனுப்பி புதுவிதமாக சண்டையிட்டனர். இந்த புதுவித சண்டையானது மக்களின் மனதை பாதித்து, உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இது,கொரிய நாடுகளின் பாரம்பரிய சண்டையாக இருந்து வரும் நிலையில், பரம எதிரிகளாக இருந்த வடகொரியாவும், தென் கொரியாவும் சில ஆண்டுகளுக்கு முன் நட்பாகின. பின்னர், இனி துண்டு பிரசுர சண்டையில் ஈடுபட வேண்டாம் என 2018ஆம்…

  Read More »
 • Photo of கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 92 இலட்சத்தை அண்மிப்பு

  கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 92 இலட்சத்தை அண்மிப்பு

  சீனாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில், தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 92 இலட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 91 லட்சத்து 79 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில்…

  Read More »
 • Photo of 24 மணி நேரத்தில் பிரேசிலில் 54771 பேருக்கு கொரோனா தொற்று

  24 மணி நேரத்தில் பிரேசிலில் 54771 பேருக்கு கொரோனா தொற்று

  கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 183,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளனர். பிரேசிலில் 54,771 பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும்,அடுத்ததாக அமெரிக்காவில் 36,617 பாதிப்பும், இந்தியாவில் 15,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர் பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவது அதிகப்படியான சோதனை மற்றும் பரந்த தொற்று உள்ளிட்ட பல காரணங்களை பிரதிபலிப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். தொற்றுநோய்களில் உலக சுகாதார அமைப்பு தகவலில் உலக அளவில் மொத்தம் 8,708,008 பேர் கொரோனாவால் பதிக்கப்பட்டு உள்ளனர். 461,715 பேர் தொற்று நோயால் பலியாகி…

  Read More »
 • Photo of சொந்த மகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய தாய்

  சொந்த மகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய தாய்

  உகாண்டா நாட்டில் ஒரு தாய் தன்னுடைய இரண்டாவது கணவனுக்காக அடியாட்களை ஏவி மகளையே வன்புணர்வு செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தன்னுடைய இரண்டாவது கணவரை அதிகமாக நேசித்துள்ளதுடன், தனது மகளுக்கு கணவன் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டும் காணமல் இருந்துள்ளார். மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது கணவருடனான உறவை முறித்துக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. இந்த நிலையில், பெண்ணின் வளர்ப்பு தந்தை பல்வேறு முறை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை தாயிடம் கூறியபொழுது…

  Read More »
 • Photo of ஆபாசப் பட நடிகையின் கொந்தளிப்பு

  ஆபாசப் பட நடிகையின் கொந்தளிப்பு

  ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை 25 வயதான ரினி கிரேசி. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவியதால், உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கரா் பந்தயங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் முடங்கிப்போனது. இதன் காரணமாக, வருமானம் இன்றி பெரிய அளவில் அவர் தவித்து வந்துள்ளார். அந்த நேரத்தில், ஆபாசப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. தொடக்கத்தில், ஆபாசப் படங்களில் நடிக்கத் தயங்கிய அவர், அதிக அளவிலான வருமானம் கிடைப்பதால், அவர்…

  Read More »
 • Photo of புதிய காதலனுடன் முன்னாள் காதலி; ஆத்திரத்தில் துறவி செய்த கொடூரம்

  புதிய காதலனுடன் முன்னாள் காதலி; ஆத்திரத்தில் துறவி செய்த கொடூரம்

  தனது முன்னாள் காதலி புதிய காதலனுடன் இருந்ததைப் பார்த்த, கோபத்தில் துறவியாக மாறிய முன்னாள் காதலான் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தாய்லாந்தை சேர்ந்த 57 வயதான துறவி உம் தீரென்ராம், லம்பாய் புவலோய என்ற 33 வயது பெண்ணை, தான் துறவியாவதற்கு முன் காதலித்து வந்துள்ளார். இதனிடையே, லம்பாய் புவலோய அடிக்கடி துறவி உம் தீரென்ராமிற்கு போன் செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 33 வயது லம்பாயின் வயிற்றில் 57 வயதான தீரென்ராமின் குழந்தை வளர்வதாகவும் கூறப்பட்டது. “தற்போது…

  Read More »
 • Photo of பிரசார பேரணியில் போராட்டம் நடத்துவோருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

  பிரசார பேரணியில் போராட்டம் நடத்துவோருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

  அமெரிக்காவின் ஆக்லஹோமா மாகாணத்தின் துல்சா பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரசார ஊர்வலம் நடத்த உள்ளார். இந்த நிலையில், அங்கு போராட்டம் நடத்துவோருக்கு ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். “திருடர்கள், மூன்றாம் தரக் குடிமக்கள் ஆகியோருக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நியூயார்க், சியேட்டல், மினியாபாலிஸ் ஆகிய இடங்களில் தாங்கள் நடத்தப்படுவதுபோல ஆக்லஹோமாவின் நடத்தப்படமாட்டீர்கள். இங்கு நடவடிக்கை கடுமையாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் மார்க் லோட்டர் தெரிவிக்கையில், “அமைதியாக போராடுபவர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுக்கவில்லை.…

  Read More »
 • Photo of ஆபிரிக்காவில் நிலச்சரிவு; 13 பேர் பலி

  ஆபிரிக்காவில் நிலச்சரிவு; 13 பேர் பலி

  ஆபிரிக்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவெரி கோஸ்ட்டின் தலைநகர் அபிட்ஜனில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில் அபிட்ஜனையொட்டியுள்ள அனாய்மா நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல…

  Read More »
Back to top button
x
Close
Close