Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

இந்த புகைப்படங்களை பகிரவேண்டாம்: பிரித்தானிய பொலிஸார் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பிரித்தானியாவில் நாய் திருட்டுகள் அதிகரித்திருப்பதாகவும், அதனால் மக்களுக்கும் பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தங்கள் விலை உயர்ந்த செல்லப் பிராணிகளின் புகைப்படங்களை வெளியிடும் பயனர்கள், பெரும்பாலும் தளத்தில் தங்களுக்கான privacy settings-ஐ சரியாக அமைப்பதில்லை.

கூடுதலாக Tags பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பயனர்களின் இருப்பிடம் திருடர்களுக்கும், திருட முயற்சிப்பவர்களுக்கும் சுலபமாகிவிடுகிறது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துப்பாக்கி முனையில் பாப்ஸ்டார் Lady Gaga-வின் Koji மற்றும் Gustav எனும் இரண்டு French bulldog வகை நாய்கள் திருடப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2019-ல் நாய் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 172 -ஆக இருந்ததாகவும், 2020-ல் 465 நாய்கள் திருட்டுபோனதாக பதிவாகியுள்ளதாகவும், திருடப்பட்ட நாய்களைக் கண்டுபிடிக்க உதவும் பிரித்தானியாவின் தொண்டு நிறுவனமான Doglost தெரிவித்துள்ளது.

ஊரடங்கில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் ஒரு நாயை செல்லப் பிராணியாக அறிமுகப்படுத்த இதுவே சிறந்த தருணம் என்று நிறைய பேர் நினைத்தார்கள். அதனால், நாய்க்குட்டியின் தேவை மிகவும் உயர்ந்தது, பலரும் பின்னணியை விசாரிக்காமல் ஆன்லைனில் வாங்க தொடங்கினர்.

இந்த நிலையில், இந்த நாய்கள் எவ்வளவு விலை உயர்ந்தவை என்று சிலருக்கு தெரியவந்தது போது, ​​அவை எவ்வளவு மதிப்புமிக்க ஒரு பொருள் என்பதை உணர்ந்த மக்களால் நாய் திருட்டுக்கள் அதிகரித்தன என்று DogLost கூறியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x