அமிதாப் பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... தொலைபேசி மூலம் வந்த அதிர்ச்சி தகவல்!
மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாக்பூர் காவல்துறைக்கு தொலைபேசியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாக்பூர் காவல்துறைக்கு தொலைபேசியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து நாக்பூர் காவல்துறையினர் உடனடியாக மும்பை காவல்துறையினரை எச்சரித்தனர், மும்பை காவல்துறையினர் வெடிகுண்டு குழுவுடன் சென்று அமிதாப் பச்சன் வீட்டை சோதனை செய்தனர். ஆனால் தேடுதல் வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் அந்த தொலைபேசி அழைப்பில், 25 பேர் ஆயுதங்களுடன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்ததாகவும் கூறியுள்ளனர்.
அமிதாப் பச்சன் மட்டுமின்றி நடிகர் தர்மேந்திரா வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இரண்டு நடிகர்களின் வடு உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சோதனையில் வெடிகுண்டுவில்லை. அந்த அழைப்பு போலியானது எனவும் உறுதியானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |