2,000 வருடங்களுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற இருவரது சடலங்கள் கண்டுபிடிப்பு

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீ நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் உடல்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடி இருக்கலாம். அப்போது, எரிமலைக் குழம்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என பாம்பீ தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் மாசிமோ ஒசன்னா கூறுகிறார்.

கி.பி 79-ல் வெசுவியஸ் என்ற எரிமலையின் சீற்றத்தால் மொத்த பாம்பீ நகரமும் மூழ்கியது. இந்த எரிமலைச் சீற்றம் பாம்பீ நகரத்தையும் அங்கு குடியிருந்தவர்களையும் சாம்பலில் புதைத்துவிட்டது.

தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம், ஆய்வு செய்வதற்கான ஒரு வளமான ஆதாரமாக மாறி இருக்கிறது.

இந்த மாதம், பண்டைய பாம்பீ நகரத்தின் புறநகரில் ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போதுதான், இந்த இரண்டு எச்சங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

புதைந்துபோன அந்தச் செல்வந்தர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கழுத்துக்கு கீழே கம்பளி ஆடையின் தடயங்கள் காணப்பட்டன.

மற்றொரு மனிதரின் வயது 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று தொல்பொருள் தள அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்துபோன மனிதர்களின் உடல்கள் இறுக்கப்பட்ட சாம்பலின் மீது உண்டாக்கிய அச்சைப் பயன்படுத்தி, அவற்றின் வார்ப்புகள் செய்யப்பட்டன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
7
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

கோவேக்சின் 2021ம் ஆண்டு 2ம் காலாண்டில் வெளிவரும்

Next Article
கொரோனா

இறுதியாக உயிரிழந்த தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்!

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான்…
Total
7
Share