அறை முழுக்க ரத்தக் கறை.. வார்னே மரணத்தில் திடீர் திருப்பம்.. கிளம்பிய புதிய பூகம்பம்!

ஷேன் வார்னே மரணம் தொடர்பாக, தாய்லாந்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, திருப்புமுணையை ஏற்படுத்தியுள்ளது.

அறை முழுக்க ரத்தக் கறை.. வார்னே மரணத்தில் திடீர் திருப்பம்.. கிளம்பிய புதிய பூகம்பம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் உயிரிழந்தார்.

முதலில் மாரடைப்பு காரணமாக தான் அவர் உயிரிழந்ததாக போலீசார் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மற்றொரு புறம் தீவிர உடற்பயிற்சி செய்தது, மதுப்பழக்கம் ஆகியவை தான் அவருக்கு தீடீரென மாரடைப்பை ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. 

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய அறிவிப்பை தாய்லாந்து காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது ஷேன் வார்னே தங்கியிருந்த அறையின் பல்வேறு இடங்களில் ரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய குளியல் டவல்களிலும் ரத்தக் கறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதிகப்படியான உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படும் ஒருவருக்கு, ரத்தம் வருமா? அப்படி வந்திருந்தாலும், எப்படி இவ்வளவு அதிகப்படியான ரத்தங்கள் வெளியேறி இருக்கும். இதில் மர்மம் இருப்பதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஷேன் வார்னேவுடன் தங்கியிருந்த 3 நண்பர்கள் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். வார்னேவின் கடைசி நிமிடங்களில் உடன் இருந்தவர்கள் அவர்கள் தான். 

ஏற்கனவே என்ன நடந்தது என்று அவர்கள் வாக்கு மூலம் கொடுத்த போதும், சந்தேகம் தீரவில்லை என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.