Wed, Jan20, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

திரையரங்கில் தேர்தல் பிரசார விளம்பரங்களை காட்சிப்படுத்த தடை

திரையரங்குகளில் தேர்தல் பிரசார விளம்பரங்களை காட்சிப்படுத்தக் கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களுக்காக திரைப்படங்களை பயன்படுத்தப்படுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, திரையரங்குகளில் திரைப்பட ஆரம்பத்தின் போது அல்லது திரைப்படத்திற்கு இடையில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுதல் தேர்தல் குற்றம் என்பதால் நாட்டின் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிக்க நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்