Wed, Jan20, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தினம் ஒரு பெண் தேடிய கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கதி

தன் கணவருக்குத் தினம் ஒரு பெண் தேவை என்பதால் தான் அவரை கொலை செய்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை விளார் சாலை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த ஜோசப் என்கிற யூசுப், குவைத் நாட்டிற்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார்.

அங்கு, தன்னுடன் வேலை பார்த்த அசிலா என்கிற இலங்கையைச் சேர்ந்த பெண்மணியைக் காதலித்து வந்துள்ளார்.

அதன் பின்னர், அசிலாவை தஞ்சைக்கு அழைத்து வந்த ஜோசப், அசிலாவை திருமணம் செய்துள்ளார்.

பின்னர், இருவரும் தஞ்சாவூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது, அசிலா போலியான பாஸ்போட் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் செல்லும் போது, அங்கு சில வழக்கறிஞர்கள் நண்பர்களாக அசிலாவுக்கு அறிமுகம் ஆகி உள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் குவைத் நாட்டிற்கு ஜோசப் என்கிற யூசுப் சென்றுள்ளார். கோவை நாட்டிற்குக் கணவர் சென்றுவிட்ட நிலையில், தஞ்சையில் உள்ள வீட்டில்
அசிலா மட்டும் தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

அப்போது, துணையின்றி தனிமையில் தவித்த அவர், முகநூல் மூலம் சில இளைஞர்களிடம் அறிமுகம் ஆகி உள்ளார்.

மனைவி அசிலாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், குவைத் நாட்டிலிருந்து தஞ்சாவூர் திரும்பி உள்ளார்.

வீட்டிற்கு வந்ததும், தன்னுடைய சொத்து மற்றும் 300 சவரன் நகைகளை எடுத்து, தன்னுடைய வங்கி லாக்கரில் வைத்து விட்டு, மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு, மீண்டும் குவைத் நாட்டிற்கே சென்று விட்டார்.

இதனால், இன்னும் கோபமடைந்த அசிலா, அந்த வங்கியின் மேனேஜரை தன் வலையில் வீழ்த்தி, கணவரின் அனுமதி இல்லாமலேயே, அவரின் லாக்கரில் உள்ள சொத்து பத்திரம் மற்றும் 300 சரவன் நகைகளை அசிலா எடுத்துள்ளார்.

இந்த தகவல்கள் தஞ்சையில் உள்ள தன் சக நண்பர்கள் மூலம் வெளி நாட்டில் உள்ள கணவருக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் தஞ்வை வந்துள்ளார்.

தஞ்சையில், வங்கி லாக்கரில் தான் வைத்த நகை மற்றும் சொத்து பத்திரங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று சென்று பார்த்துள்ளார். ஆனால், லாக்கரில் எதுவும் இல்லை என்றும், அவற்றை அவர் மனைவி மேனேஜரின் உதவியுடனே எடுத்துக்கொண்டதும் தெரிய வந்தது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அவர், மனைவி மற்றும் வங்கி மேனேஜர் இருவர் மீதும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அசிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால், கடும் கோபம் அடைந்த அசிலா, ஏற்கனவே தனக்கு அறிமுகம் ஆன வழக்கறிஞர்கள் உதவியுடன் திருச்சியில் குடியேறி கணவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

மனைவியிடமிருந்து விவகாரத்து கேட்டு, அவரது கணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

அப்போது, மனைவி இல்லாமல் தனியாகத் தவித்த வந்த ஜோசப் என்கிற யூசுப், சில பெண்களுடன் தவறான பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்காகச் சொத்தை விற்று பணத்தைச் செலவழிப்பதுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த அசிலா கணவரை கொலை செய்யத் திட்டமிடுகிறார். அதன்படி, முதல் முறை கணவரை கொலை செய்ய திட்டமிட்ட நிலையிலிருந்து, அவர் எப்படியோ தப்பி விடுகிறார்.

திருச்சியைச் சேர்ந்த கூலிப்படையினரை அனுகி, தன் கணவரை கொலை செய்ய 15 லட்சம் ரூபாயம் பேரம் பேசி, அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுக்கிறார்.

அதன்படி, கடந்த 25 ஆம் திகதி தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் என்ற பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த ஜோசப் என்கிற யூசுப்பை, சில மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடுமையாகத் தாக்கி விட்டு, கல்லணை வழியாகத் திருச்சிக்குத் தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முதலில் அவரது மனைவி அசிலாவை அழைத்து விசாரிக்கின்றனர். அப்போது, “ என் கணவர் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை ” என்று அவர் சாதிக்கிறார்.

அதன் பிறகு, பொலிஸார் அவரிடம் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில், “ என் கணவருக்குத் தினம் ஒரு பெண் தேவை. அவர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக, எனக்குப் பணம் தருவதை அவர் நிறுத்தியதால், ஆத்திரத்தில் கூலி படையை வைத்து, கணவரை கொலை செய்தேன் ” என்று, அசிலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்