Wed, Jan20, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஆபிரிக்காவில் நிலச்சரிவு; 13 பேர் பலி

ஆபிரிக்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவெரி கோஸ்ட்டின் தலைநகர் அபிட்ஜனில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை கொட்டி வருகிறது.

இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில் அபிட்ஜனையொட்டியுள்ள அனாய்மா நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இந்த கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்