Wed, Jan20, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

Prime Grand, Ward Place நிர்மாணம் மீண்டும் ஆரம்பம்

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group, தனது Prime Grand முதற்தர ஆடம்பர திட்டத்தின் நிர்மாணப் பணிகளை இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட #RestartSL நெறிமுறைகளுக்கு இணங்க முன்னெடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் தமது உறுதியான பங்களிப்பை வழங்கி வரும் Prime Group, Asia Property Guru விருதுகளில் 2019 ஆம் ஆண்டு இலங்கையின் ‘Best Luxury Condo development’ விருது வென்ற ‘Prime Grand’ திட்டத்தின் முக்கிய மைல்கல்லை அண்மையில் கொண்டாடியிருந்தது.

ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், இக் குழுமம் topping off நிகழ்வை மார்ச் 11 ஆம் திகதி நடாத்தியிருந்ததுடன், இது இறுதி சீமெந்து ஊற்றலைக் கொண்டாடும் மேற்கட்டுமானம் பூர்த்தி செய்யப்பட்டதை நினைவு கூறியது.

இத் திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களான Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால் , இணை தலைவர் சந்தமினி பெரேரா, MAGA Engineering இன் தலைவர் Capt. M.G. குலரத்ன, DG5 இன் தலைவர் சுரஞ்சித் டி சில்வா, CSEC இன் முகாமைத்துவ பணிப்பாளர் சிரோமல் பெர்ணான்டோ, VForm Consultants இன் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் ரத்னாயக்க மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஒரேயொரு உயர் மாடிக் கட்டிடமான Prime Grand 37 மாடிகளுடன், 160 மீற்றர்கள் வானுயர்ந்து நிற்பதுடன், இலங்கையின் உயரத்தில் அமைந்த மிக நீண்ட infinity நீச்சல் தடாகத்தை கொண்டமையவுள்ளது.

“கொழும்பு 07 இன் மிக உயரமான கட்டிடத்தின் topping off நிகழ்வைக் கொண்டாடுவதானது, இலங்கை ரியல் எஸ்டேட் துறையை புதிய உயரங்களை நோக்கி நகர்த்துவதில் நாம் முன்னணியில் இருப்பதைக் குறிக்கிறது,” என குழுமத்தின் தலைவர் பிராமனகே பிரேமலால் தெரிவித்தார்.

“Prime Grand தனித்துவமிக்கது மட்டுமன்றி, நாட்டின் மிக மதிப்புமிக்க முகவரியில், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் ஆடம்பர வசதிகளுடன் அமைந்துள்ளது.

இது கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஒரேயொரு அதி உயர் மாடிமனைத் திட்டமென்பதுடன், உச்சக்கட்ட தனியுரிமையுடன், கொழும்பின் வானவிளிம்பை தடங்கலின்றி பார்த்து ரசிக்கும் வாய்ப்பையும் வழங்குகின்றது.

அந்த வகையில், கொவிட் 19 இன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் குவியும் முதலீடுகளின் மூலம் மிகவும் செழுமையடையும் முக்கிய கட்டுமான திட்டங்களில் ஒன்றாக Prime Grand இருக்குமென நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்.

கொவிட் 19 அனர்த்த நிலையிலும் கட்டிடத்தின் மதிப்பு குறையவில்லை என்பதுடன் இந்தத் திட்டம் குறித்து நேர்மறையான விபர கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம்”.

Prime group, முன்னணி கட்டுமான நிறுவனமான MAGA Engineering உடன் இணைந்து அனைத்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக பின்பற்றப்படுவதையும், நிர்மாணப் பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பும் நன்கு பராமரிக்கப்படுவதை கட்டுமான நிறுவனமானது உறுதி செய்துள்ளது.

மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள Prime Grand இன் கட்டுமான செயன்முறையானது, அவசியம் ஏற்படும் எந்த நேரத்திலும் நாட்டின் பொருளாதார தேவைகளின் பொருட்டு இணங்கும் Prime Group இன் திறனுக்கான சான்றாகும்.

இப்போது முன்னரை விட உள்நாட்டு நிறுவனங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் பொருட்டு முன்வர வேண்டிய அவசியம் உள்ளதுடன், ரியல் எஸ்டேட் துறையானது வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலுக்கும், உள்ளூர் வர்த்தகத்தை வலுப்படுத்தவும் முக்கிய காரணியாக மாறும் திறன் கொண்டதாக உள்ளது.

“இலங்கையின் ரியல் எஸ்டேட் துறை வரலாற்றில் முதன்முறையாக A- (Stable) என்ற பிரத்தியேக கடன் தரப்படுத்தலை பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு நிறுவனம் என்ற வகையிலும் நாம் பெருமையடைகின்றோம். இம் மதிப்பீடு எங்கள் நிதி ஸ்திரத்தன்மையின் மீது வெளிப்படைத்தன்மையை வழங்குவதோடு, மேலும் எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய பெறுமதியான முதலீடுகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தையும் உறுதி செய்கிறது” என பிராமனகே பிரேமலால் மேலும் தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் துறையில் முற்று முழுதாக இலங்கை வர்த்தகநாமமாக தனது கால்தடத்தை பதித்துள்ள Prime Group, Moody’s முதலீட்டு சேவைகளின் குழும நிறுவனமான ICRA Lankaவிடமிருந்து A- (Stable) என்ற பிரத்தியேக கடன் தரப்படுத்தலை பெற்றுக்கொண்ட ஒரேயொரு டெவலப்பராக இவ்வருடம் தனது 25 ஆம் ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது.

இந்தத் தரப்படுத்தலானது கொவிட் 19 நெருக்கடியின் எழுச்சிகளுக்கு எதிராக, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை அடிப்படையில் உறுதியாகவும் திடமாக நிற்கும் Primeஇன் திறனை உறுதிப்படுத்துவதுடன், உள்ளூர் ரியல் எஸ்டேட் சந்தையை பூர்த்தி செய்வதுடன், தமது வாடிக்கையாளர்களின் முதலீட்டையும் பாதுகாக்கின்றது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் முதலீட்டை,Prime Grand போன்ற மதிப்புமிக்க சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் மீள கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை குழுமம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதித் துறையினர் ஏற்கனவே ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு சாதகமான வட்டி விகிதங்களை வழங்கியதுள்ளதுடன் , எதிர்காலத்தில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் சொத்து விலையைக் கொண்ட Prime Grand போன்ற சொத்தில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள கொள்வனவாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டதாக இவை அமைந்துள்ளன.

25 வருட காலமாக ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து பிரிவினரையும் பூர்த்தி செய்யும் Prime Grand அதன் சந்தைப் பிரசன்னத்துக்காக நன்கு அறியப்பட்டுள்ளது. தனது பயணத்தில், இக்குழுமம் 4000 காணி மற்றும் வீட்டுத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், தனது 43 மாடிமனை வேலைத்திட்டங்களில் 36 திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது.

இது கடந்த காலங்களில் பொருளாதார மற்றும் சமூக குழப்ப நிலைகளின் போதும் தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான அதன் திறனை காலத்துக்கு காலம் நிரூபித்து வந்துள்ளது. இக்குழுமம் இலங்கையின் 17 மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதுடன், ரியல் எஸ்டேட் துறையில் அதன் நிபுணத்துவம் காரணமாக ஆசியாவின் சிறந்த 100 வர்த்தக நாமங்களில்’ ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், பல விருதுகளையும் தனதாக்கியுள்ளது.

எனவே, தொற்றுநோயால் ஏற்படும் பின்னடைவுகள், சவால்களை தாங்கக்கூடிய அனுபவம், நிபுணத்துவம் மற்றும் சாதூரியம் இக் குழுமத்துக்கு உண்டு.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்