ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணித்துள்ளதோடு கடுமையான வாதபிரதிவாதத்திலும் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட குழு கூட்டம் இன்றைய தினம் அக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதியை விமர்சித்ததால், நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி வெளிநடப்பு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே, இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதியை விமர்சிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு பலர் தங்களுக்கு கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.