தவறுகள் குறைப்பாடுகள் இருந்தாலும் நல்லாட்சியை முன்னோக்கிக் கொண்டுசெல்வோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்சைக்குரிய பிணைமுறி மோசடி குறித்து இன்று காலை 9.30 மணிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குமூலமளித்திருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அச்சமின்றி நாங்கள் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். தவறுகள், குறைப்பாடுகள் இடம்பெற்றாலும் நல்லாட்சி அரசை முன்னோக்கிக் கொண்டுசெல்வோம் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்றுடன் முடிவுற்றுள்ள நிலையில், விசாரணை அறிக்கை எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.