பிக்பாஸில் டைட்டில் வின்னரான பிரபல நடிகை

தமிழில் ஒடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சியை போன்று தற்போது தெலுங்கிலும் நான் ஸ்டாப் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி வருகிறது. நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 75 நாட்கள் ஒளிப்பரப்பப்பட்டது.

பிக்பாஸில் டைட்டில் வின்னரான பிரபல நடிகை

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக நடிகை பிந்து மாதவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் பிரபல நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். ஏராளமான பார்வையாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி முதன்முதலில் இந்தியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. 

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் என பலமொழிகளில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. தமிழில் கமல் தொகுத்து வரும் இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன் நிறைவுபெற்றுள்ளது. 

தமிழில் ஒடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சியை போன்று தற்போது தெலுங்கிலும்  நான் ஸ்டாப் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி வருகிறது. நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 75 நாட்கள் ஒளிப்பரப்பப்பட்டது. 

நேற்றுடன் இந்த நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில் டைட்டில் வின்னராக நடிகை பிந்து மாதவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிந்து மாதவிக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதோடு தெலுங்கில் முதல் முறையாக டைட்டில் வின்னராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியாளராக பிந்து மாதவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.