Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பாரதி கண்ணம்மா வெண்பாவின் சின்னத்திரை வளர்ச்சி!

சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இவர் புதுயுகம் டிவியில் உணவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தற்போது ஜி தமிழில் ‘அஞ்சறைப் பெட்டி’ என்கிற சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஆரம்பம் முதலே நிறைய சீரியல் வாய்ப்புகள் ஃபரீனாவின் கதவை தட்ட, அவற்றை நிராகரித்திருக்கிறார் ஃபரீனா. பின்னர் கலர்ஸ் தமிழின் ‘தறி’ சீரியலும், விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் ஃபரீனாவின் மனதை மாற்றியிருக்கின்றன.

இவற்றில் ’தறி’ சீரியலில், வாய் பேச முடியாத வாணியாகவும், ‘பாரதி கண்ணம்மா’வில் வெண்பா என்ற வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த ஃபரீனா, எம்.பி.ஏ முடித்து விட்டு, டிவி-யின் மீதிருந்த ஈர்ப்பால் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தன் கரியரை ஆரம்பித்திருக்கிறார்.

அப்படி தொலைக்காட்சியில் வேலை செய்யும் வேளையில், அங்கு பணிபுரிந்த ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு தான் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஃபரீனாவுக்கு, அவரது ஆடை, ஆபரணங்களுக்காகவே ரசிகர் பட்டாளம் உருவானது. சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளினி என்பதற்கு ஏற்றவாறு, இவர் மிகப்பெரிய உணவுப் பிரியையாம்.

அதிலும் தென்னிந்திய உணவுகள் தான் ஃபேவரிட்டாம். தக்காளி சாதத்துடன் சிக்கன் சேர்த்து சாப்பிடுவது, ஃபரீனாவுக்குப் பிடித்தமான ஒன்றாம். அதோடு ட்ரை ஃப்ரூட் லட்டு, சாக்கோ பால்ஸ் தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் என காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்