ரோஷினிக்கு இத்தனை படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததா?

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை பற்றி பேசுகிறது.

ரோஷினிக்கு இத்தனை படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததா?
ரோஷினி

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை பற்றி பேசுகிறது.

ஆரம்பத்தில் கதை ஒரு விதமாக இருக்க பின் ஒரு கட்டத்தில் தொடர் கதைக்களம் அப்படியே மாறிவிட்டது.

இப்போது பாரதியும் கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என்பது மட்டும் சீரியலின் முக்கிய கருவாக இருக்கிறது. இப்போது ஒளிபரப்பாகும் டிராக்கை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

இதில் நாயகியாக நடித்துவந்த ரோஷினிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நிறைய படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் செங்கேணி வேடத்திலும், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் மரியம்மாவாக நடிக்க முதலில் ரோஷினிக்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் ஏதோ காரணத்தால் அவர் அந்த படங்களில் நடிக்க மறுத்துள்ளார்.