கோபி சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி

கோபி சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்  – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டில் கோபி பாக்கியா கோர்ட்டுக்கு போன விஷயம் குறித்து எல்லோரும் பேசிக் கொண்டிருக்க இந்த வீட்ல இருக்க போறது யாரு? அப்பாவா? அம்மாவா? என கேட்க அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என அவருடைய தாத்தா ஆறுதல் கூறுகிறார். ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு போனதுக்கு பதில் ஓட்டுக்கு போய் இருக்கலாம் என செழியன் சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார்.

இந்த பக்கம் பாக்கியா எழிலுடன் ஹோட்டலுக்கு சென்று வித விதமாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார். வீட்டுக்கு வந்த கோபியிடம் என்னாச்சு என்னை கேட்க எல்லாம் முடிஞ்சு போச்சு கோர்ட்ல அவ்வளவு தைரியமா தெளிவா விவாகரத்து கொடுத்த ஒத்துக்கிட்டேன் விவாகரத்தும் கொடுத்துட்டாங்க இனி எனக்கும் பாக்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவள் எனக்கு பொண்டாட்டி கிடையாது என கோபி கூறுகிறார்.

என்னை மீறி இந்த வீட்ல இருந்து யாராவது பாகியாவோட தனிப்பட்ட முறையில் உறவு வைத்துக் கொண்டால் நடக்கிறதே வேற என சொல்லிவிட்டு மேலே சென்று விடுகிறார். இதனால் குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி அடைகிறது‌. ராதிகா வீட்டில் கோபி வந்து விவாகரத்து கிடைத்து விட்டதாக சொன்ன விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்க டீச்சர் பத்தி எனக்கு நல்லா தெரியும் கோபி ஏதோ பொய் சொல்றாரு நீ வக்கீலுக்கு போன் போட்டு கேளு அந்த அம்மாவும் இவ்வளவு நாளா இந்த விஷயத்துக்கு தான் காத்துகிட்டு இருந்துச்சு போல என ராதிகாவின் அண்ணா சொல்ல உடனே வக்கீலுக்கு போன் போட்டு கேட்க விவாகரத்து கிடைத்து விட்டது என கூறுகிறார்.

இதனையடுத்து ராதிகா தான் இனி முடிவு எடுக்க வேண்டும் என அவருடைய அம்மா சொல்ல ராதிகா யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.