Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நடு ரோட்டில் வைத்து… சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட தம்பதி…

தெலுங்கானா மாநிலத்தில் சட்டத்தரணி தம்பதி நடு ரோட்டில் வைத்து, சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல வழக்கறிஞர் காட்டு வாமன் ராவ். அவரது மனைவி பி.வி.நாகமணி. இவரும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தனர்.

இந்த தம்பதி நீதிமன்றத்திலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தது. மந்தானி மற்றும் பெடப்பள்ளி நகரங்களுக்கு இடையே காரை வழிமறித்த மர்ம கும்பல், திடீரென்று அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வக்கீல் தம்பதியைத் தாக்கத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதலை அங்குச் சென்று கொண்டிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இருப்பினும், அந்த கும்பல் விடாமல் அந்த வக்கீல் தம்பதியை தாக்கியது.

தப்பித்து ஓட முயன்ற வாமன் ராவை அந்தக் கும்பல் விரட்டி சென்று, சரமாரியாக வெட்டும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

மற்றொரு வீடியோவில், படுகாயமடைந்த நாகமணி, அசையாமல் காரின் இருக்கைக்கு இடையில் சிக்கியிருக்கிறார்.

படுகாயம் அடைந்த இருவரும் அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.

வக்கீல்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தக் கொடூர தாக்குதலுக்கு தெலுங்கானா பார் அசோசியேஷன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் வருமானம் இன்றி தவித்த வழக்கறிஞர்களின் நலனிற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த தம்பதி எடுத்திருந்தனர்.

இணையத்தில் மற்றொரு ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் வாமன் ராவ், தன் மீது தாக்குதல் நடத்தியவர் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் குந்தா சீனிவாஸ் தான் என்று குற்றஞ்சாட்டுகிறார்.

இந்த தம்பதியினர் ஏற்கனவே தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருந்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x