Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

அனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் !

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலன்ஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனர்.

காது கேட்காத மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள்.

அக்டோபர் 2-ம் திகதி உலகளவில் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. சூரரைப் போற்று, க.பெ. ரணசிங்கம் போன்ற படங்களை தொடர்ந்து இந்த படமும் அமேசான் தளத்தில் வெளியாகிறது.

துப்பறியும் போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார் செய்கின்றனர்.

கடைசி வரை யூகிக்க முடியாத ஒரு உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக சைலன்ஸ் இருக்கும்.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த ட்ரைலரை வெளியிட்டார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் நிச்சயம் த்ரில்லர் விரும்பிகளை இந்த படம் ஈர்க்கும் என்று கூறலாம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x