புதிய படங்களில் நடிக்க மறுக்கும் முன்னணி நாயகி

0

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது ஹேமந்த் மதுக்கர் இயக்கியுள்ள நிசப்தம் படத்தில் நடித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி பெண்ணாக அவர் நடித்துள்ள இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதையடுத்து இன்னும் புது படங்கள் எதிலும் அனுஷ்கா கமிட்டாகவில்லை.

ஆனால் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் வேடத்தில் நடிக்க அழைத்தபோது அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

அதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில இளவட்ட டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைகூட ஓகே பண்ணவில்லையாம். கதை பிடிக்கவில்லை, கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லி தவிர்த்து விட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கவுதம் மேனன் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருந்தார். அதில் மட்டும் நடிப்பார் என தெரிகிறது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

 

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x