ஆண்ட்ரியாவின் 10 ரகசியம்... பிறந்தநாள் ஸ்பெஷல்  

6. இதுவரையில் எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றிய ஆண்ட்ரியாவுக்கு மிகவும் ஃபேவரட், ஃப்ரெண்ட்லியாக பழக கூடிய இசையமைப்பாளர் என்றால் அது டி.எஸ்.பி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா தான்.  ஆண்ட்ரியாவின் பயணம் தொடங்கிய நாள் முதல் இவர்களுடன்  பயணித்து வருகிறார். 

ஆண்ட்ரியாவின் 10 ரகசியம்... பிறந்தநாள் ஸ்பெஷல்  

நடிகை ஆண்ட்ரியாவின் 37வது பிறந்தநாளான இன்று ஆண்ட்ரியா பற்றி பலரும் அறியாத சில தகவல்கள்.

நடிகை ஆண்ட்ரியா

ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் பின்னணி பாடகியாக இருந்த ஒருவர் இந்த அளவிற்கு சினிமாவில் ஒரு நடிகையாக முத்திரை பதிக்க முடியுமா? என்ற கேள்விக்கு சரியான பதிலாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. 

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களான வெற்றிமாறன், கமல்ஹாசன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ராம் என அனைத்து முன்னணி இயக்குனர்களின் தேர்வாக இருந்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. 

இன்று இந்த பன்முக வித்தகிக்கு 37வது பிறந்தநாள். ஆண்ட்ரியாவின் பிறந்தநாளான இன்று அவரை பற்றின சில தகவல்களை பார்க்கலாம் :

1. அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் நடிகை ஆண்ட்ரியா ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 'பச்சைகிளி முத்துச்சரம்' திரைப்படத்தில் என்பது தான். ஆனால் இவர் 2005 க்கு முன்னரே 'கண்ட நாள் முதல்' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் திரையில் தோன்றியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். 

இந்த படத்தில் நடிக்கையில் ஆண்ட்ரியா கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இசையில் மட்டுமே அவரின் கவனம் முழுவதும் இருந்தது. காலத்தின் கட்டாயம் அவர் தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த நடிகையாக கிடைத்தது. 
 
2. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை படத்தில் நடிகை ஆண்ட்ரியாவின் ரோல் மிகவும் ஒரு சேலஞ்சிங்கான ஒன்றாக அமைந்தது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் ஏராளமான பிரச்சனையில் சிக்கியுள்ளார். அமீரின் மனைவியாக பல இடங்களில் நெருக்கமாக நடித்ததால் அவரின் எதிர்கால வாழ்க்கையில் ஏராளமான பாதிப்பை சந்தித்துள்ளார். 

3. இதுவரையில் எந்த ஒரு இயக்குனரையும் அணுகி வாய்ப்பு கேட்டதில்லை. அவர் நடிக்கும் அனைத்து வாய்ப்புகளும் தானாக தேடி வந்தவையே. அவர் இதுவரையில் நடித்த படங்களின் லிஸ்ட் எண்ணிக்கையில் குறைவு  என்றாலும் அனைத்து படங்களுமே தரமான திரைப்படங்கள்.

4. தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளத்திலும் சிறப்பான திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. ஃபஹத் ஃபாசில் ஜோடியாக நடித்த 'அன்னையும் ரசூலும்' படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் பாராட்டுகளை குவித்தவர். அந்த படத்தில் மூலம் ஆண்ட்ரியா -  ஃபஹத் ஃபாசில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதல் என கிசுகிசுக்கப்பட்டார். 

5. புஷ்பா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'ஓ சொல்றியா மாமா..' பாடல் மூலம் ஹஸ்கி வாய்ஸில் பாடி அனைவரையும் கிறங்கடிக்க வைத்தவர் ஆண்ட்ரியா. எந்த அளவிற்கு பிரபலமானதோ அதே அளவுக்கு சர்ச்சையில் சிக்கியது. இந்த வாய்ப்பை முதலில் என்னால் முடியவே முடியாது என மறுத்து இருக்கிறார் ஆண்ட்ரியா. எது எல்லாம் எனக்கு வேண்டாம் என்றேனோ அதே தான் எனக்கு வந்து சேரும் என அவரே கூறியிருக்கிறார். பட்டி தொட்டி எல்லாம் இந்த பாடல் ஹிட் அடித்தது இந்த பாடல். 

6. இதுவரையில் எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றிய ஆண்ட்ரியாவுக்கு மிகவும் ஃபேவரட், ஃப்ரெண்ட்லியாக பழக கூடிய இசையமைப்பாளர் என்றால் அது டி.எஸ்.பி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா தான்.  ஆண்ட்ரியாவின் பயணம் தொடங்கிய நாள் முதல் இவர்களுடன்  பயணித்து வருகிறார். 

7. நடிகை ஆண்ட்ரியா ஒரு மிக பெரிய விஜய் ரசிகை. ஒரு ஹீரோ போல இல்லாமல் மிகவும் தன்மையாக இருப்பது விஜய்யிடம் அவருக்கு மிகவும் பிடித்த விஷயம். 

8. நடிகை ஆண்ட்ரியாவுக்கு ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் நிறைந்த வுமன் சென்ட்ரிக் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். ஃபைட் சீன் இருந்தால் மிக மிக சந்தோஷமாம். 

9. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து நடிக்கையில் ஆண்ட்ரியாவுக்கும், சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மிக்கும் ஒரே வயது தானாம். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து ஆண்ட்ரியாவை கலாய்த்து கொண்டே இருப்பாராம் வரலக்ஷ்மி. என்னோட அப்பாவோட ரொமான்ஸ் சீன்ல நடிக்கிற என கிண்டல் செய்வதற்காகவே ஷூட்டிங் ஸ்பாட் வருவாராம் வரலக்ஷ்மி.  

10. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க காரணமாக இருந்தவர் நடிகர் தனுஷ். இயக்குனர் செல்வராகவன் ஒரு உயரமான பெண்ணை படத்தின் ஒரு ரோலுக்காக தேடி வருகிறார். நீ தான் உயரமா இருக்குறியே நீ நடிக்கிறியா என கேட்டுள்ளார். அப்படி ஆண்ட்ரியாவுக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஆயிரத்தில் ஒருவன் பட வாய்ப்பு.