பைக் பயணத்திற்கு பெயர் சூட்டிய அஜித்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

பைக் பயணத்திற்கு பெயர் சூட்டிய அஜித்
நடிகர் அஜித்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து நடிகர் அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். 

மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தொடர்பான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் மேலானார் சுரேஷ் சந்திரா அவர்கள் அஜித்தின் அடுத்த உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது என தெரிவித்து இருக்கிறார்.