நிதானமாக ஆப்கானிஸ்தானை காலி செய்து முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து

0

Afghanistan vs New Zealand : உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்து பிடித்திருக்கிறது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழாவில் டான்டனில் நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டம் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக் காரர்களான ஜஜாய் 34 ஓட்டங்களுக்கும், நூர் அலி சத்ரான் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஆட்டக்காரர்கள் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்தனர். ஆனால், ஒரு பக்கம் சிறப்பாக ஆடிய சத்ரான் அரை சதம் கடந்தார்.

41.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சத்ரான் 59 ஓட்டங்கள் குவித்திருந்தார். நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டும், பெர்குசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குப்தில், முன்ரோ வந்தனர். முதல் ஓவர் முதல் பந்தில் குப்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார்.

ஆட்டத்தின் 7.5 வது ஓவரில் காலின் முன்ரோ அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் இருவரும் ஓட்டங்கள் குவிக்க தொடங்கினர். 25.4 வது ஓவரில் 48 ஓட்டங்கள் எடுத்திருந்த ராஸ் டெய்லர், வெளியேறினார்.

இறுதியில் 32.1 ஓவரில் 173 ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து, 7 விக்கெட் வித்தியாத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அணித்தலைவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடி 79 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இது வரை தாம் விளையாடிய 3 ஆட்டங்களில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது நியூசிலாந்து.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x