ஷங்கர் மகளுக்கு பிடித்த ஹீரோ இவர் தானாமே...

இந்தியாவின் முக்கியமான டைரக்டர்களில் ஒருவரான ஷங்களின் இளைய மகளான அதிதி, கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

ஷங்கர் மகளுக்கு பிடித்த ஹீரோ இவர் தானாமே...

இந்தியாவின் முக்கியமான டைரக்டர்களில் ஒருவரான ஷங்களின் இளைய மகளான அதிதி, கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மாடலிங், பாடகி என பல துறைகளிலும் திறமை வாய்ந்த அதிதி ஷங்கர், தற்போது நடிகையாக உள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கி உள்ள விருமன் படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்தி, பக்கா கிராமத்து கெட்அப்பில் நடித்துள்ள படம்.இந்த படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் நடந்த விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில், பாவாடை தாவணியில் வந்து, மேடையில் ஆடி பாடி ரசிகர்களை கவர்ந்தார் அதிதி. ஆனால் முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே, தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல, சோஷியல் மீடியாவிலும் டிரெண்டாகி மிகவும் பாப்புலர் ஆகி விட்டார்.

இதற்கு காரணம் விருமன் ஆடியோ விழாவில் சூர்யாவை பார்த்ததும் ரசிகர்கள், ரோலக்ஸ்...ரோலக்ஸ் என கத்திய போது அவர்களுடன் சேர்ந்து, கார்த்தி பக்கத்தில் அமர்ந்திருந்த அதிதியும் ரோலக்ஸ்...ரோலக்ஸ் என உற்சாகமாக கத்தியது தான். இவர் கத்திய வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்டானதால், அதிதியும் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார்.

விருமன் ஆடியோ விழாவில் பிங்க் பாவாடை தாவணியில் வந்த அதிதியின் போட்டோக்கள் ஒரு புறம் வைரலாகி வரும் நிலையில், மற்றொரு புறம் விருமன் படத்தின் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து அவர் பாடிய மருத வீரன் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டு, படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளனர். இந்த பாடலில் கார்த்தி - அதிதியின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த சமயத்தில் அதிதி, மீடியா ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்று வெளியாகி, வேகமாக பரவி வருகிறது. அந்த பேட்டியில், விருமன் ஆடியோ விழாவில் அதிதி, ரோலக்ஸ் என கத்திய வீடியோவை காட்டி போது, ஆமாம். நான் நிஜமாவே சூர்யா சாரின் மிகப் பெரிய ஃபேன். அதனால் தான் ஆடியன்ஸ் கத்திய போது என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் நானும் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தினேன். அது மறக்க முடியாத தருணம். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதே போல் தான் கத்துவேன் என்றார்.

இதை கேட்ட ரசிகர்கள், அப்படியானால் சூர்யாவின் அடுத்த படத்திற்கு ஹீரோயின் ரெடி. முதல் படமான விருமன் ரிலீசாவதற்கு முன்பே, இரண்டாவதாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விட்டார் அதிதி. இதனால் மூன்றாவதாக அவரது ஃபேவரைட் ஹீரோவான சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க கூட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW