வருங்கால மாப்பிள்ளையை அறிமுகப்படுத்திய தமன்னா.... ஷாக்கான ரசிகர்கள்..

தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது.

வருங்கால மாப்பிள்ளையை அறிமுகப்படுத்திய தமன்னா.... ஷாக்கான ரசிகர்கள்..

நடிகை தமன்னா திருமணம்

தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. 

இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

முன்பு திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று தமன்னா கூறியிருந்தார். 

தற்போது பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. 

இதற்கு தமன்னா மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால் தகவல் உண்மையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தமன்னா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது தொழில் அதிபர் கணவரை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு அவரே ஆண் வேடத்தில் இருப்பது போன்று தோன்றுகிறார்.

மேலும், #திருமண வதந்திகள் #எனது வாழ்க்கை பற்றி கதை எழுதும் ஒவ்வொருவருக்கும் என்று ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.