இரண்டாவது மாதம் திருமண நாளை கொண்டாடிய ரோஜா சீரியல் நடிகை!

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தனது இரண்டாவது மாதம் திருமண நாளை கொண்டாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளி வருகிறார். 

இரண்டாவது மாதம் திருமண நாளை கொண்டாடிய ரோஜா சீரியல் நடிகை!

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தனது இரண்டாவது மாதம் திருமண நாளை கொண்டாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளி வருகிறார். 

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. தாய்மார்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரியங்கா, 'ரோஜா' சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சீதா ராமன்' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ரோஜா சீரியலில் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையதடித்த பிரியங்கா, சீதா ராமன் சீரியலிலும் கலக்கல் நாயகியாக வலம் வருகிறார். பொதுவாகவே மாமியார் மருமகள் சண்டை என்றாலே ஒரு சுவாரசியம் இருக்கும். 

அந்தவகையில் சீதா ராமன் சீரியலும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்துக்கொண்டு தற்போது ஒட்டுமொத்த தாய்மார்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா, சமீபத்தில் தான் ராகுல் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். 

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் ஜாலி பண்ணும் ஏகப்பட்ட புகைப்படங்களை பிரியங்கா பதிவிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த அந்நிலையில் பிரியங்கா நல்காரி தனது இரண்டாவது மாதம் திருமண நாளை கொண்டாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஷேர் செய்துள்ளார். 

பொதுவாக பலரும் திருமணமாகி ஓராண்டு முடிவடைந்து தங்களது முதலாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுவது வழக்கம் ஆனால் பிரியங்கா நல்காரி தனது இரண்டாவது மாதம் திருமண நாளை கொண்டாடியுள்ளது ரசிகர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW