ஆடைகளை கழட்ட சொல்லி பிரியங்காவை துன்புறுத்திய இயக்குனர்!

தற்பொழுது பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா தனக்கு நடந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். 

ஆடைகளை கழட்ட சொல்லி பிரியங்காவை துன்புறுத்திய இயக்குனர்!

பொதுவாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே சினிமாவில் பிரபலமடைய முடியும் என்ற பிம்பம் ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக நடிகைகள் எந்த ஊடகத்திற்கு பேட்டி அளித்தாலும் தங்களது அட்ஜஸ்மென்ட் குறித்து பேசி வருகிறார்கள்.

தற்பொழுது பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா தனக்கு நடந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். 

அதாவது நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.

இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் இதன் மூலம் பாலிவுட்டில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அப்படி தொடர்ந்து அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் கமிட்டான காரணத்தினால் இவருடைய சம்பளம் அதிகரித்தது.

எனவே ஹாலிவுட் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2018ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இவர் வெப் தொடரான சிட்டாடெலில் படு கவர்ச்சியாக நடித்திருந்த நிலையில் அனைவரையும் வாய்ப்பு பிளக்க வைத்தார். 

இப்படி தற்பொழுது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா 2002-2003 காலகட்டத்தில் தான் நடித்த பொழுது ஒரு இயக்குனர் செயலால் வேதனை அடைந்ததை பற்றி பகிர்ந்து உள்ளார்.

அதாவது பாலிவுட் படம் ஒன்றில் ரகசிய ஏஜென்ட் ரோடில் நடித்திருந்ததாகவும் ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதில் நடிகருடன் நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டதாக கூறினார். 

மேலும் அப்படத்தின் இயக்குனர் தன்னை உள்ளாடையுடன் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தன் ஸ்டைலிஷ்-ஐ அழைத்து ஆடையை கழட்டி உள்ளாடையை காட்ட சொன்னதாகவும் அதை பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுவதாகவும் இயக்குனர் கொச்சையாக பேசியதாக கூறினார்.

இவ்வாறு உள்ளாடையுடன் நடிக்க மறுத்த பிரியங்கா இரண்டு நாட்கள் நடித்த பிறகு அந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டு விலகினாராம்.

அந்த இயக்குனரின் செயல் தனக்கு மனவேதனையை தந்ததாகவும் அது நடந்து 20 ஆண்டுகள் ஆகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW