Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி படங்களில் நடித்து வந்தார்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து, அவருக்கு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. மற்ற மொழிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால், சின்ன சின்ன வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களில் நடித்தார். சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்திருந்தார்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் சின்னத்திரை தொடர்களிலும் கவனம் செலுத்தினர்.

சன் டிவியில் வெளியான, நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

இவரும் தொழிலதிபர் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக, எளிமையாக நடந்ததாகக் கூறப்படுகிறது. பெங்காலி முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது. இதில், நடிகை அம்பிகா, டிவி நடிகர் நரேஸ்வர் உட்பட சின்னத்திரை மற்றும் திரை பிரபலங்கள் சிலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்