அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, திரைப்படங்கள் தவிர்த்து சீரியலிலும் கலக்கி வருகிறார். திரையில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சமூக வலைத்தளங்களிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு.
சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த நடிகை குஷ்பு மேல்மருவத்தூர் செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்ட்டவசமாக நடிகை குஷ்புவுக்கு ஏதும் ஆகவில்லை.
ஆனால் அவர் பயணித்த வாகனம் சுக்குநூறாக நொறுங்கி கிடக்கிறது. இதுகுறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில் மேல்மருவத்தூர் அருகே லொறி மோதியதால் கார் விபத்து ஏற்பட்டது. இறைவனின் அருளால் நான் பத்திரமாக உள்ளேன்.
இதைத்தொடர்ந்து கடலூரில் நடக்கும் வேல் யாத்திரைக்கு செல்லவிருக்கிறேன். விபத்து குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
எனது கணவர் கடவுள் முருகன் மேல் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை என்று பதிவு செய்துள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் பாதுகாப்பாக இருங்கள், மருத்துவமனைக்கு செல்லுங்கள் என ஆறுதலாக கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
Met with an accident near Melmarvathur..a tanker rammed into us.With your blessings and God's grace I am safe. Will continue my journey towards Cuddalore to participate in #VelYaatrai #Police are investigating the case. #LordMurugan has saved us. My husband's trust in him is seen pic.twitter.com/XvzWZVB8XR
— KhushbuSundar ❤️ (@khushsundar) November 18, 2020
பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார் குஷ்பு. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:
கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்
Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.