பிரபல நடிகருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட்:  பிரபல நடிகை திடுக்கிடும் தகவல்

தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான இஷா கோபிகர், பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லியதாக கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Apr 25, 2022 - 13:01
பிரபல நடிகருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட்:  பிரபல நடிகை திடுக்கிடும் தகவல்

’என் சுவாச காற்றே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை இஷா கோபிகர், அதன் பிறகு ‘நெஞ்சினிலே’, 'ஜோடி’, நரசிம்மா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘சினிமாவுக்காக அட்ஜஸ்ட் செய்ய கோரி வற்புறுத்தும் நிலைமை இங்கே அதிகம் உள்ளது.

ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபல நடிகருடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டுமென்று அந்த படத்தின் தயாரிப்பாளர் வற்புறுத்தினார். ஆனால் நான் முடியாது என்று சொல்லி விட்டதால் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார்

இதே போல் பல இடங்களில் அட்ஜெஸ்ட் செய்யாமல் இருந்ததால் தான் நான் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்துவிட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இஷா கோபிகரின் இந்தக் குற்றச்சாட்டால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்