விஷாலின் லத்தி பட அதிரடி ட்ரைலர் இதோ!
விஷால் இயக்கி நடிக்கவுள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் இயக்கி நடிக்கவுள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வரிசையில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி.
விஷாலுடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள, லத்தி திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர தயாராகி வரும் லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 22ம் தேதி கிறிஸ்மஸ் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் லத்தி திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியானது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |