மரம் முறிந்து வீழ்ந்ததில் தந்தை ஒருவர் உயிரிழப்பு

தலவாக்கலை - கிரேட்வெஸ்டர்ன் ஸ்கல்பா பிரிவில் நேற்று மாலை 3.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததில் தந்தை ஒருவர் உயிரிழப்பு

பாரிய மரமொன்று முறிந்து  வீழ்ந்ததில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை - கிரேட்வெஸ்டர்ன் ஸ்கல்பா பிரிவில் நேற்று மாலை 3.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்லத்துரை மணிமாறன் வயது 42 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.