Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

சுரங்கத்தில் பாம்புகளுடன் போராடி உயிர்பிழைத்த 62 வயது நபர்

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் இரண்டு நாள் rattlesnake எனப்படும் நச்சு விரியன் பாம்புகளுடன் சுரங்கத்தில் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அந்த வகைப் பாம்புகளின் ஒரு கடியிலேயே மனிதர்கள் இறந்துவிடுவர். சுரங்கத்தில் தனியாகச் சிக்கிக்கொண்ட அந்த 62 வயது நபர் மூன்று அவ்வகைப் பாம்புகளைக் கொன்று உயிர்தப்பியுள்ளார்.

ஜான் வாடல் (John Waddell) தங்கம் போன்ற அரிய உலோகங்களைத் தேடி சுரங்கத்தினுள் இறங்கியதாக அவரது நண்பர் கூறினார்.

அப்போது இடுப்பில் கட்டியிருந்த கயிற்றில் இணைக்கப்பட்ட சாதனம் அறுந்ததால் சுமார் 30 மீட்டர் உயரத்திலிருந்து வாடல் விழுந்தார்.

இரு கால்களின் எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டது. சுமார் 48 மணி நேரம் தண்ணீர், உணவு ஏதும் இல்லாமல் அவர் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டிருந்தார்.

வாடலைத் தேடிச் சென்ற நண்பர் அவரது கூக்குரலைக் கேட்டு உதவி நாடிச் சென்றார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மீட்டர் கயிற்றைக் கொண்டு அதிகாரிகள் வாடலைச் சுரங்கத்திலிருந்து மீட்டனர்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்