பிரித்தானிய ராஜ குடும்பத்திலேயே அழகான பெண் யார் தெரியுமா?

பிரித்தானிய ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை அழகான பெண் இவர்தான் என்றால், பெரும்பாலும் பலரும் இளவரசி கேட்டைக் குறித்துச் சொல்வதாகத்தான் நினைப்பார்கள்.

ஆனால், புகழ்பெற்ற ஃபேஷன் ஏஜன்சிகளிலெல்லாம் கேட் வாக் செய்த ஒரு அழகிய இளம்பெண் ராஜ குடும்பத்தில் இருக்கிறார்.

அந்த அழகியின் பெயர் அமெலியா (Lady Amelia Windsor, 26). மகாராணியாரின் உறவினரான George Windsor, Earl of St Andrews என்பவரின் மகள்தான் இந்த அமெலியா.

வெறும் உடல் அழகு மட்டுமல்ல அமெலியாவுக்கு, பல தொண்டு நிறுவனங்களின் தூதுவர் என்னும் பெருமையும் உண்டு.

பல்வேறு ஃபேஷன் ஷோக்களில் இடம்பெற்று ஊடகங்களில் அவரது புகைப்படங்கள் வெளியாவது வழக்கம்தான் என்றாலும், அமெலியா அதிக கவனம் ஈர்த்தது எப்போது தெரியுமா? 

2018ஆம் ஆண்டு, இளவரசர் ஹரி மேகன் திருமணத்தில் பங்குகொள்ள அமெலியாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. அப்போதுதான் பெருமளவில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானார் அமெலியா.

ஆனால், அதில் தனக்கு பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று கூறி, அவர் பாட்டுக்கு அவரது ஃபேஷன் ஷோ வேலையைப் பார்க்கப்போய்விட்டார் அமெலியா!

ஒரு முக்கியமான விடயம், அமெலியா பிரித்தானிய அரியணையேறும் வரிசையில் 42ஆவது நபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.