ஒரே வீட்டில் 105 வருடங்களாக வசிக்கும் பிரித்தானிய பெண்

1918-ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் ஹுத்வைட்டின் மையத்தில், பார்கர் தெருவில் உள்ள ஒரு அழகான இரண்டு படுக்கையறை வீட்டில் எல்சி ஆல்காக் (Elsie Allcock) பிறந்தார்.

ஒரே வீட்டில் 105 வருடங்களாக வசிக்கும் பிரித்தானிய பெண்

பிறந்ததிலிருந்து 105 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண், 

1918-ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் ஹுத்வைட்டின் மையத்தில், பார்கர் தெருவில் உள்ள ஒரு அழகான இரண்டு படுக்கையறை வீட்டில் எல்சி ஆல்காக் (Elsie Allcock) பிறந்தார்.

இப்போது 105 வயதாகும் அவர்,  அதாவது 105 வருடங்களாக அவர் ஒரே வீட்டில் வசிக்கிறார்.

தன்னால் இனி இந்த வீட்டை விட்டு வேறு எங்கேயும் சென்று வசிக்க முடியாது என உறுதியாக இருக்கிறார்.

Also Read - நடுவானில் விமானத்தின் கதவை திறந்து காத்து வாங்கிய பயணி!

எல்சிக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பேர குழந்தைகள் மட்டுமல்லாமல், 14 கொள்ளு பேரக்குழந்தைகளும், 11 எள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், இன்னும் சில நாட்களில் தான் 105 வருடங்களாக வாழ்ந்த அதே வீட்டிலேயே தனது 105வது பிறந்த நாளை அவர் கொண்டாட உள்ளார்.

தன் வாழ்நாளில் இதுவரை இரண்டு உலகப் போர்கள், நிலவில் மனிதன் முதல் காலடி வைத்த தருணம், பெருந்தொற்றுக்கள் என அனைத்தையுமே சந்தித்துள்ளார் எல்சி. 

பிரித்தானியாவில் 22 பிரதமர்கள் மற்றும் 5 முடியாட்சிகள் ஆகியவற்றையும் பெண் கண்டுள்ளார். 1941-ஆம் ஆண்டு திருமணமான பிறகும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேலும், "இந்த வீட்டில் பெரிதாக எந்தவித மாற்றங்களும் செய்ததில்லை. இங்கு இருப்பதைவிட நான் வேறு எங்கேயும் சந்தோஷமாக இருந்ததில்லை” என்று எல்சி கூறுகிறார்.

அப்போது 250 பவுண்டுகளுக்கு வாங்கிய இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 75,000 பவுண்டுகள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW