இன்று இந்த ராசிக்காரர்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்...

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 23 புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்...

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 23 புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று வணிகர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். இரும்பு வியாபாரிகள் இன்று பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் எந்த வேலையையும் இன்றே முடித்து விட முயற்சி செய்யுங்கள். இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினருடன் தகராறு ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், உங்கள் வீட்டில் அமைதி குலைந்துவிடும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் யாருடனும் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். ஆரோக்கியமாக இருக்க இரவில் லேசான உணவை உண்ண வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

ரிஷபம் - இலக்கு சார்ந்த வேலைகளைச் செய்பவர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி சுமூகமாக முடிவடையும். ஹார்டுவேர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான வேலைகளைச் செய்பவர்களும் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் பணி வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் வணிக முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இன்று சில விருந்தினர்கள் வீட்டிற்கு வரலாம். அன்புக்குரியவர்களுடன் செலவிடும் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்களின் நிதி நிலை பிரச்சனையாக இருக்காது. இன்று பண வரவிற்கான வாய்ப்பும் உள்ளது. இன்றைய நாள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மிதுனம் - அன்புக்குரியவர்களுடன் உங்கள் நடத்தையை நன்றாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். சில குடும்ப தகராறுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து செல்வதும் சாத்தியமாகும். இன்று உங்களுக்கு பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். பழைய கடனை திரும்ப கட்ட வேண்டி இருக்கலாம். இது தவிர, இன்று நீங்கள் சிறிய கடன்களையும் திருப்பிச் செலுத்தலாம். உங்கள் வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தின் சூழல் இன்று மிகவும் சூடாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு வேலையையும் அவசரப்பட்டு பயத்தில் செய்யாதீர்கள். இன்று வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று எந்த ஒரு வியாபார விஷயத்திலும் மனதில் குழப்பம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், முக்கியமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலை மோசமடைந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. எனவே, கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

கடகம் - வேலையின் அடிப்படையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் பழைய தொடர்புகளால் இன்று பயனடையலாம். நீங்கள் விரும்பும் வேலையை விரைவில் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய நபர்களுடன் வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வீட்டின் பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வரும் நாட்களில் பெரிய அளவில் லாபம் அடையலாம். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு பற்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். தூய்மையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை

சிம்மம் - இன்று வாகனத்தைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் காயமடையலாம். வேலையைப் பற்றி பேசினால், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும். எளிதில் முடிக்கும் வேலைகள் கூட இன்று சிரமத்துடன் முடிவடையும். நீங்கள் புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் நிதிக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணப்பற்றாக்குறையால் உங்கள் திட்டம் பாதியில் நிற்கலாம். இன்று உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. குடும்பத்தில் உள்ள எந்த ஒரு உறுப்பினரின் உடல்நிலையும் திடீரென மோசமடைவதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பீர்கள். மருத்துவர்கள் மற்றும் மருந்துகளுக்காக நீங்கள் நிறைய பணம் செலவழிக்கலாம். இன்று உங்களுக்கு மன நிலை நன்றாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கன்னி - வணிகர்கள் அரசு விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு சிறிய கவனக்குறைவும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும். பங்குதாரர்களைக் கொண்ட வணிக உரிமையாளர்கள் இன்று கவனமாக இருப்பது நல்லது. வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். அரசு ஊழியர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சவாலான நாளாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். மேலும் உங்கள் உயர் அதிகாரிகளின் அழுத்தமும் உங்கள் மீது அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறிய தவறுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வீட்டின் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்க, அன்புக்குரியவர்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். அத்துடன் முடிந்தவரை அதிக நேரத்தை செலவிட முயற்சிக்கவும். இது உங்கள் உறவில் அன்பையும் இனிமையையும் அதிகரிக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று சராசரியாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், உணவில் அதிக கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:05 மணி வரை

துலாம் - இன்று வேலை தொடர்பான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரிகளின் பொருளாதார நிலை மேம்படும். இன்று நீங்கள் சில முக்கிய வணிக முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று நீங்கள் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். இருப்பினும், இன்று நீங்கள் குழந்தைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவழிக்க முடியும். நாளின் இரண்டாம் பகுதியில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இருப்பினும், உங்களிடையே விரைவில் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

தனுசு - தொழிலதிபர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், அனுபவம் உள்ளவர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் இன்று எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. சிறு வணிகர்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலை எதுவும் இன்று முழுமையடையாமல் இருந்தால், அது உங்கள் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதுபோன்ற தவறுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் பெற்றோருடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் உடன்பிறப்பு திருமணத்திற்கு தகுதியுடையவராக இருந்தால், இன்று வீட்டில் அவர்களது திருமணம் பற்றிய விவாதம் நடைபெறலாம். விரைவில் உங்கள் வீட்டில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படலாம். நிதி சிக்கல்களைத் தவிர்க்க சேமிப்பில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று உடல்நிலை நன்றாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மகரம் - அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பொறுப்புகளை முழு உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவீர்கள். உங்கள் கடின உழைப்பால் உங்கள் முதலாளியும் மிகவும் ஈர்க்கப்படுவார். இன்று வியாபாரிகளுக்கு கலவையான நாளாக இருக்கும். நீங்கள் தேவையில்லாமல் சுற்றித் திரிய வேண்டியிருக்கும். இது தவிர, தடைப்பட்ட பணத்தால், நிதி தொடர்பான கவலைகளும் இன்று உங்களை தொந்தரவு செய்யலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். பணம் சம்பந்தமாக வீட்டில் தகராறு ஏற்படலாம். உங்கள் உடன்பிறப்புடனான உறவுகள் மோசமடைய வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்களை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கோபத்தில் தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசும்போது, உங்கள் கோபமும் மன அழுத்தமும் ஆரோக்கியத்தைப் பலவீனப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:55 மணி முதல் மாலை 6:00 மணி வரை

கும்பம் - நீங்கள் அரசு வேலைக்கு தயாராகி இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். தனியார் வேலைகளைச் செய்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இன்று நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம். உங்களின் முக்கிய வேலைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்கள் வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். அன்பானவர்களுடன் சிரித்துக்கொண்டே இன்றைய நாள் கழியும். உங்கள் வாழக்கைத் துணை இன்று நல்ல மனநிலையில் இருப்பார். உங்கள் துணையிடமிருந்து மதிப்புமிக்க பரிசையும் பெறலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் உடல்நிலையில் சில இடையூறுகள் ஏற்படும். இன்று உங்கள் கால்களில் வலி இருந்தால் பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:10 மணி முதல் மாலை 3:50 மணி வரை

மீனம் - நீங்கள் புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் பிரச்சனை உங்களுக்கு தான். நீங்கள் வேலையுடன் சொந்தமாக சிறு வணிகத்தைத் தொடங்க விரும்பினால், கவனமாக சிந்திக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக உங்கள் நிதி நிலைமையை நீங்கள் கண்காணிக்க வேண்டும். உங்கள் தந்தையுடன் கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். அவர்களின் எந்த முடிவுகளிலும் நீங்கள் உடன்படவில்லை என்றால், உங்கள் தரப்பை மிகவும் நிதானமாகவும் சிந்தனையுடனும் முன்வைக்க அறிவுறுத்தப்படுகிறது. மோதல் விஷயங்களை மோசமாக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் துன்பங்களை எதிர்கொண்டு முழு ஆரதவும் கொடுப்பார்கள். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் இன்று உங்கள் உடல்நிலை குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 8:00 மணி வரை