நீரில் மூழ்கி மாணவன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கிய இரண்டு சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கிய இரண்டு சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய, ஹெனானிகல வெவாவில் மூழ்கி 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேர் ஒரு குழுவுடன் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காலி ஹபராதுவ பிரதேசத்தில் வசிக்கும் இரு இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மொனராகலை கும்புக்கன் ஓயாவில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உறவினர்களுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |