இன்று வெளியாகவுள்ள சுகாதார அமைச்சின் முக்கிய தீர்மானம் 

நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றும் சுகாதார நிபுணர்களின் கவலைகளை அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

இன்று வெளியாகவுள்ள சுகாதார அமைச்சின் முக்கிய தீர்மானம் 

நடைமுறையில் உள்ள கொவிட் வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவது குறித்து இன்று அறிவிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் வீட்டை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பு முறை வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
சுகாதாரத் துறையினரின் தொழிற்சங்க நடவடிக்கையை 10 நாட்களுக்கு இடைநிறுத்துவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் அத்தகைய நடவடிக்கைகளின் நீதியான மற்றும் நியாயமற்ற செயற்பாடுகள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்பதோடு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து நியாயமான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றும் சுகாதார நிபுணர்களின் கவலைகளை அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.