பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மீண்டும் வழமைக்கு

சத்திரசிகிச்சை மற்றும் மயக்கமுறச் செய்வது தொடர்பான தொடர்பான மருந்துகள் பற்றாக்குறையாக காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மீண்டும் வழமைக்கு

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்ட பேராதனை போதனா வைத்தியசாலையின் அனைத்து சத்திரசிகிச்சைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேராதனை போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பேராதனை போதனா வைத்தியசாலையின் அவசர சத்திரசிகிச்சைகளை தவிர ஏனைய அனைத்து சத்திரசிகிச்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பேராதனை போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் எச்.எம். அர்ஜுன திலகரத்னவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

சத்திரசிகிச்சை மற்றும் மயக்கமுறச் செய்வது தொடர்பான தொடர்பான மருந்துகள் பற்றாக்குறையாக காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

உதாரணமாக neostigmine எனும் மருந்து ஒரு சில நோயாளிகளுக்கு போதுமான அளவிலேயே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னதாக, பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டு. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறது என்று செய்தி வெளியானது. 

இதனையடுத்து, இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்த செய்தியை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவிட் செய்திருந்தார்.

அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லேயை தொடர்பு கொண்டு இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.