ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – ரணில்

காணொளி தொழில்நுட்பம் ஊடான கலந்துரையாடலின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – ரணில்

ஜனாதிபதிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

காணொளி தொழில்நுட்பம் ஊடான கலந்துரையாடலின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.

இதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் எதிர்க்கவில்லை என தெரிவித்த அவர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் என்ன நடக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கும் இதே பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.