இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் திடீர் அதிகரிப்பு!

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் திடீர் அதிகரிப்பு!

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாயிலிருந்து (20 ரூபாயால்) 177 ரூபாயாக அதிகரித்துள்ளது. 
 
ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாயிலிருந்து (23 ரூபாயால்) 207 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒடோ டீசல் ஒரு லீற்றரின் விலை 111 ரூபாயிலிருந்து 121 ரூபாயாக (10 ரூபாயால்) அதிகரித்துள்ளதுடன் , சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாயிலிருந்து 159 ரூபாயாக (15 ரூபாயால்) அதிகரித்துள்ளது.

இதேவேளை மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாயிலிருந்து 87 ரூபாயாக (10 ரூபாயால்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW