அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் சஜித் வெளியிட்டுள்ள கருத்து

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் சஜித் வெளியிட்டுள்ள கருத்து

ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாது செய்து மனித உரிமையை உறுதி செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு சுதந்திரம், அரசியல் சுதந்திரம், போராடும் சுதந்திரம் என்பன உறுதி செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் விசேட சட்டத்தையும் உருவாக்குவோம் என கூறியுள்ளார்.

அரசியல் தலையீடுகள் இன்றி, குற்றம் செய்த, ஊழல் புரிந்த மற்றும் நாட்டின் வளங்களை கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றும் வலியறுத்தியுள்ளார்.

அதன்படி கொள்ளையடிக்கப்பட்ட டொலரையும், தங்கத்தையும் யுரோவையும் மீண்டும் இந்நாட்டு மக்களுக்கே சொந்தமாக்குவேன் என்றும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW