Sadaharitha விருதுகள் இரவில் தங்க விருதுகள் உட்பட 250 க்கும் மேற்பட்ட விருதுகள்

இந்த காலகட்டத்தில் சிறந்து விளங்கிய நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

Sadaharitha விருதுகள் இரவில் தங்க விருதுகள் உட்பட 250 க்கும் மேற்பட்ட விருதுகள்

பொதுமக்களுக்கு பல வரப்பிரசாதங்களுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த முதலீட்டுக்கான வாய்ப்புகளை வழங்கும் இலங்கையின் புகழ்பெற்ற நிறுவனமான Sadaharitha Plantations Ltd ஏற்பாடு செய்த 2019/20 மற்றும் 2020/21 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த விருதுகள் இரவு, அண்மையில் மறக்கமுடியாத வகையில் விமரிசையாக இடம்பெற்றது.

 'தைரியத்தை உள்ளெடுங்கள், அச்சத்தை புறந்தள்ளுங்கள்” (INHALE COURAGE EXHALE FEAR) என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற Sadaharitha விருதுகள் இரவு நிகழ்வில் ஊழியர்களின் செயல்பாட்டு பெறுபேற்றுத்திறன்கள், சேவைத் திறன்கள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் போற்றிப் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

 இந்த விருதுகள் வழங்கும் விழா தெஹிவளை அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட்டில் Sadaharitha நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவர் சதீஸ் நவரத்ன, சிரேஷ்ட முகாமைத்துவ பணியாளர்கள் மற்றும் இலங்கைக்கு உலகளாவிய புகழைக் கொண்டு வந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற மோட்டார் பந்தயச் சாம்பியனான திரு. டிலாந்த மாலகமுவ ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் சிறந்து விளங்கிய நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், பல ஊழியர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக விசேட விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், பத்து ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த சிறந்த ஊழியர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

 Sadaharitha Plantations Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான சதீஸ் நவரத்ன அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “எமது ஊழியர்களின் தரம் மற்றும் உற்சாகம் குறித்து நான் தொடர்ந்தும் வியப்படைகிறேன். உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், ஒட்டுமொத்த அணியாலும் அதன் விற்பனை இலக்குகளை அடைந்து சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த முடிந்துள்ளது. இலங்கைக்கு அகில் மரங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்த, எங்கள் நிறுவனம் பல ஆண்டுகளாக உள்ளூர் அகில் மரச் சந்தைக்கு தரமான அகில் மரங்களை வழங்கும் பெருமையைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 1300 பேரைக் கொண்ட எங்கள் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இந்த விருதுகள் இரவு நிகழ்வில் Sadaharitha நிறுவனத்தின் சொந்த வாசனை திரவிய வர்த்தகநாமமான Sior Verde அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் மோட்டார் பந்தய சாம்பியனான திரு. மாலகமுவவிற்கு முதல் வாசனை திரவியம் வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளில் Sadaharitha ஏற்கனவே பல சர்வதேச விற்பனை நிலையங்களை நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வர்த்தகரீதியான வனவியல் தொழில்துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட சந்தை முன்னிலையாளராகத் திகழ்ந்து வருகின்ற Sadaharitha Plantations, 1300 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 30,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் விசுவாசத்தால் நிறுவனத்தின் நிலையான வளர்ச்சியின் அத்திவாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அகில் மர முதலீட்டாளர்களுக்கு பண வடிவிலான பலாபலன்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம் வாடிக்கையாளர்களின் சார்பாக நம்பிக்கையின் பலன்களை அறுவடை செய்ய வழிவகுத்துள்ளது.

 Sadaharitha நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான திரு. ஜெயம்பதி மிராண்டோ அவர்கள் கூறுகையில், “வெற்றிகரமான தொழில் மார்க்கங்களை நிறுவுவதற்கு எங்கள் நிறுவனம் வழங்கும் ஆதரவு, நிறுவனத்தை வெற்றியை நோக்கி நிச்சயம் மேலுயர்த்தும். எங்கள் ஊழியர்களின் தகைமைகள் மூலம் தொழில்முறையை மேம்படுத்த நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

 Sadaharitha Plantation Company நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், அதன் 30 கிளைகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட விற்பனைப் பணியாளர்கள் மூலம் 30,000 க்கும் அதிகமான திருப்திகரமான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க அது உறுதி பூண்டுள்ளது.