இன்றைய ராசிபலன் - கடகம் உள்பட 7 ராசிக்கார்களுக்கு நேர்மறையான நாள்

கடகம், துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையுடனும், நன்மை பயக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மற்ற ராசிக்காரர்கள் எடுக்கும் காரியங்களிலும், பணம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய ராசிபலன் - கடகம் உள்பட 7 ராசிக்கார்களுக்கு நேர்மறையான நாள்

கடகம், துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையுடனும், நன்மை பயக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மற்ற ராசிக்காரர்கள் எடுக்கும் காரியங்களிலும், பணம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மேஷம்

ஆடம்பரச் செலவுகள் தவிர்த்து சிக்கனமாக இருந்தால் கடன்களை சமாளிக்கலாம். வேலையிடத்தில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேல் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

ரிஷபம்

எவ்வளவுதான் சிக்கனமாக நடந்தாலும் பணத்தட்டுப்பாடு உண்டாகும். வாகனம் ஓட்டும்போது கவனத்தைச் சிதற விட வேண்டாம். நீங்கள் செய்யும் வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருங்கள். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்கம் ஏற்படும். கடன் சுமை அதிகரிக்கும்.

மிதுனம்

அனைத்துவிதமான குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். நவீனமான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும்.

கடகம்

வியாபாரம் செழிப்பாக நடக்கும். பங்குச்சந்தையில் நல்ல வருமானம் பெறலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் நண்பர்கள் மூலமாக ஆதாயம் அடையலாம். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்

சக ஊழியர்களுடன் அணுக்கமாக நடந்துகொள்ளுங்கள். எவ்வளவு வேலை செய்தாலும் முதலாளிகள் திருப்தி அடையாமல் குறை கூறுவார்கள். கூட இருந்தே குழி பறிக்கும் கூட்டம் உங்களைச் சுற்றி உள்ளதால் அதை அடையாளம் கண்டு ஒதுங்குங்கள். வேலை சம்பந்தமாக அலைச்சல் அதிகமாகும்.

கன்னி

வயது மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். தொழிலை விரிவுபடுத்த அதிக முதலீடு செய்வீர்கள். தேவையில்லாத கெட்ட பெயர் உண்டாகலாம். வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் மனச் சங்கடம் அடைவீர்கள். பொருளாதார நெருக்கடியால் சில முக்கிய காரியங்களில் தடைகள் உண்டாகும்.

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவரைப் பாருங்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோக லாபத்தைக் கொடுக்கும். வெளியூரிலிருந்து வரும் செய்திகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்

கடுமையாக உழைத்தால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகம் ஏற்படும். வாழ்க்கைத் துணை அடுத்தவர்களின் பேச்சை கேட்பதால் அவஸ்தைப்படலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். ஆடல், பாடல் என பொழுதுபோக்கு அம்சங்களில் மனம் செல்லும்.

தனுசு

பிரச்னையில் இருந்து விலக நினைத்தாலும் அது உங்களை விடாது. வியாபார ஒப்பந்தம் போடும்போது பத்திரங்களை நன்றாக படித்துப் பாருங்கள். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம். பணப்புழக்கம் சற்று சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரம்

மாணவர்கள் அக்கறையோடு படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாய தொழில் சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு நடந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறுவார்கள். வெளியூர்ப் பயணங்கள் மூலமாக புதிய ஆர்டர்களைக் கொண்டு வருவீர்கள். பணத்தட்டுப்பாடு குறையும்.

கும்பம்

கடன்களை செலுத்தி நிம்மதியான நிலையைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி தரும். கூட்டாளிகள் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் வேலையைப் பார்ப்பீர்கள்.