முப்பொன் விழா காணும் புத்தளம் சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம்

புத்தளம் சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம் தனது முப்பொன் விழாவைக் கொண்டாடுகின்றது. 150 வருட பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சிறப்புடன் திகழும் பாடசாலையின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் முதற்கட்டமாக புதிய கட்டிட திறப்பு விழா கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றது. அரச நிதியொதுக்கீட்டில் வாசிக சாலை, கணினி அறை மற்றும் கணித - விஞ்ஞான ஆய்வுக்கூடங்களை கொணட புதிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விசேட திருப்பலி இடம்பெற்றதுடன், நடைபவனியும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரான திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு நோயெல் இம்மானுவேல் ஆண்டகை பங்கேற்றிருந்தார்.

இதேவேளை, பாடசாலையில் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி எதிர்வரும் 24ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்று கௌரவிக்குமாறு பாடசாலையின் நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.