தமிழர் தரப்புக்கு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அழைப்பு

வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், பசுமை தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தமிழர் தரப்புக்கு  ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அழைப்பு

அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின்  தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றில் இன்று(10) உரையாற்றிய ஜனாதிபதி ரணில் இந்த அழைப்பினை விடுத்தார்.

வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும்,  பசுமை தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும்  ஜனாதிபதி கூறினார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை  எடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி,  காணாமல் போனோர் விடயங்களையும் ஆராய்வதாக குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் இது பற்றி தமிழ் தரப்புடன் கலந்துரையாடவுள்ள நிலையில், அதற்கு தமிழர் தரப்பு பங்களிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.