Ponniyin Selvan Movie Review - பொன்னியின் செல்வன் விமர்சனம்

Ponniyin Selvan First Review and Rating: Ponniyin Selvan is an upcoming much awaited movie of Kollywood which is gearing up for the grand release on this Friday.

Ponniyin Selvan Movie Review - பொன்னியின் செல்வன் விமர்சனம்

Ponniyin Selvan  First Review and Rating: Ponniyin Selvan is an upcoming much-awaited movie of Kollywood which is gearing up for its grand release this Friday. 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தை PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளனர். இந்தத் திரைப்படம் 30ஆம் திகதியான இன்று வெள்ளிக்கிழமை உலகமெங்கும் திரையிடப்படப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்க நடிகர்களான கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் படத்தின் டுவிட்டர் விமர்சனம் 

பொன்னியின் செல்வன் முதல் பாதி நன்றாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், மணிரத்னத்தின் திரைக்கதை சூப்பர் என்றும் பெருமையாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 

நெட்டிசன் ஒருவர், இப்படத்தில் கார்த்தி மற்றும் சியான் விக்ரமின் நடிப்பு, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கதை, காட்சியமைப்பு, பிரம்மாண்ட தயாரிப்பு ஆகியவை பாசிட்டிவ் என்றும் சில இடங்களில் தொய்வு ஏற்படுவது நெகட்டிவ் என்றும் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காதவர்களுக்கு இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் புரிவதற்கு சற்று கஷ்டமாக இருக்கும் என்றும் 2 முறை பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள விமர்சனத்தில், பொன்னியின் செல்வன் பிளாக்பஸ்டர் சரித்திர கதை என்றும் கார்த்தி மற்றும் விக்ரமின் நடிப்பு பிரமாதமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

முதல் பாதி, என்ன ஒரு அனுபவம். வாவ் என ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில், எதிர்பார்த்தபடியே வந்தியத்தேவன் அமர்களப்படுத்தி இருக்கிறார். 

விரிவான விமர்சனத்துக்கு காத்திருங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW